Sunday 28 June 2015

குதிரைவாலி தயிர் சோறு

குதிரைவாலி தயிர் சோறு

தேவையானவை

  • குதிரைவாலி அரிசி - 500 கிராம்
  • தயிர் - அரை கோப்பை
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை
  • மாதுளை, இஞ்சி - சிறிதளவு.
செய்முறை

     குதிரைவாலியைச் சுத்தம் செய்து மூன்று கோப்பை நீர் சேர்த்து, நன்கு வேகவைத்துக் கொள்ளவும். சோறு குளிர்ந்த பிறகு, தயிர் சேர்த்து, கையால் நன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி, மாதுளை, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:- 

     அரிசியை விட மேலானது, இந்தக் குதிரைவாலி. நார்ச் சத்து அதிகம் நிறைந்து, உடல் வலிமையைத் தரக்கூடியது. அதிகம் ஆரோக்கியம் நிறைந்தது. இதனுடன் தயிர் சேரும்போது 'லாக்டோபாசிலஸ்’ (lactobacillus) என்ற வயிற்றுக்கு தேவையான பாதுகாப்பு பாக்டீரியாவை தருகின்றது. வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலத் தன்மையைக் குறைத்து வயிற்றுப் புண்ணைச் சரிசெய்யும்

No comments:

Post a Comment