Tuesday 12 May 2015

நமது அங்காடியில் கிடைக்கும் உணவுப்பொருள்வகைகள்.

பாரம்பரிய அரிசி வகைகள்
¤ காட்டுயானம் அரிசி
¤ வெள்ளைப் பொன்னி அரிசி
¤ பூங்கார் அரிசி
¤ தூயமல்லி அரிசி
¤ மாப்பிள்ளைச் சம்பா சரிசி
¤ சீரகசம்பா அரிசி
¤ கிச்சடி சம்பா அரிசி
¤ சிகப்புகவுணி அரிசி
¤ கருப்புகவுணி அரிசி
¤ மூங்கில் அரிசி
¤ கைக்குத்தல் அரிசி

பாரம்பரிய சிறுதானியங்கள்
¤ கம்பு அரிசி
¤ குதிரைவாலி அரிசி
¤ சாமை அரிசி
¤ வரகு அரிசி
¤ திணை அரிசி
¤ பனிவரகு/காடைக்கன்னி அரிசி
¤ கேழ்வரகு
¤ சோளம்
¤ இருங்குசோளம்
¤ சிவப்புசோளம்
¤ கம்புக் குருணை
¤ சிறுதானிய அவல் வகைகள்
¤ சிறுதானிய மாவு வகைகள்
¤ சிறுதானிய சேவை வகைகள்
¤ சிறுதானிய தோசை மாவு வகைகள்
¤ சிறுதானிய சத்து மாவு
¤ கம்பு பூரி சப்பாத்தி மாவு
¤ கேழ்வரகு பூரி சப்பாத்தி மாவு
¤ சிறுதானிய சப்பாத்தி மாவு

மளிகைப்பொருட்கள்
¤ துவரம் பருப்பு
¤ கடலைப்பருப்பு
¤ பாசிபருப்பு
¤ வடைபருப்பு
¤ நாட்டு மல்லி
¤ மிளகாய்
¤ கொண்டைகடலை
¤ கொள்ளு
¤ சோயா
¤ பச்சைப்பட்டாணி
¤ பச்சைபயிறு
¤ தோல் உளுந்து
¤ உளுந்து
¤ காராமணி
¤ வேர்க்கடலை
¤ கடுகு
¤ பசுநெய்
¤ புளி
¤ கொடம்புளி
¤ மலைத்தேன்
¤ பனைவெல்லம்
¤ நாட்டுச்சர்க்கரை
¤ அச்சுவெல்லம்
¤ சுக்குக்கருப்பட்டி
¤ மணத்தக்காளி வற்றல்
¤ சுண்டக்காய் வற்றல்
¤ மோர்மிளகாய் வற்றல்
¤ கொத்தவரங்காய் வற்றல்
¤ மிளகாய்ப் பொடி
¤ மல்லிப்பொடி
¤ குழம்பு மிளகாய் தூள்
¤ இட்லி பொடி

நறுமணமூட்டிகள்
¤ மிளகு
¤ சீரகம்
¤ பெருஞ்சீரகம்
¤ கசகசா
¤ சாதிபத்ரி
¤ அன்னாசி பூ
¤ கிராம்பு
¤ பிரியாணி இலை
¤ பட்டை
¤ ஏலக்காய்
¤ வெந்தயம்

தீனி வகைகள்
¤ கேழ்வரகு முறுக்கு
¤ குதிரைவாலி முறுக்கு
¤ வரகு முறுக்கு
¤ சாமை காராசேவு
¤ காராபூந்தி
¤ சிறுதானிய மிக்சர்
¤ இருங்கு சோளப்பொரி
¤ மாப்பிள்ளைச் சம்பா பொரி
¤ மாப்பிள்ளைச் சம்பா காரப்பொரி
¤ மாப்பிள்ளைச் சம்பா பொரி உருண்டை
¤ இருங்கு சோளப்பொரி உருண்டை
¤ தேன் நெல்லி
¤ சிறுதானிய லட்டு வகைகள்
¤ எள் உருண்டை
¤ கடலை உருண்டை
¤ கமர்கட்டு
¤ பழச்சாறு வகைகள்
¤ பதநீர்

எண்ணெய் வகைகள்
¤ நல்லெண்ணெய்
¤ கடலைஎண்ணெய்
¤ சூரியகாந்தி எண்ணெய்
¤ தேங்காய் எண்ணெய்
¤ விளக்கெண்ணெய்
¤ வேப்பெண்ணெய்
¤ இலுப்பை எண்ணெய்
¤ புங்க எண்ணெய்
¤ கடுகு எண்ணெய்

¤ ஹெர்பல் பொருட்கள்
¤ ஹெர்பல் சோப்
¤ பாக்குமட்டை சோப்
¤ ஹெர்பல் பேஸ்ட்
¤ பல்பொடி
¤ ஹெர்பல் ஷாம்பூ
¤ ஹெர்பல் ஃபேஷ்வாஷ்
¤ நலங்கு மாவு

¤ மூலிகைப் பொருட்கள்
¤ வலிநிவாரணிகள்
¤ மண்பாண்டப் பொருட்கள்
¤ கைவினைப் பொருட்கள்
¤ சணல் பொருட்கள்
¤ பனைபொருட்கள்
¤ மரப் பொருட்கள்
¤ தமிழ்மருத்துவ நூல்கள்
¤ உணவுபற்றிய நூல்கள்
¤ சூழலியல் குறித்த நூல்கள்
¤ விதைகள்
¤ இயற்கை உரங்கள்
¤ பூந்தொட்டிகள்
¤ மூலிகைத் தேநீர் பொடி
¤ திரிகடுகம் தேநீர் பொடி
¤ சுக்குமல்லி தேநீர் பொடி
¤ ஆவாரம் பூ
¤ Biotique products
¤ Pronature products




உணவே மருந்து மருந்தே உணவு

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
                                                                          -திருவள்ளுவர்

உணவே மருந்து மருந்தே உணவு

               தமிழ் பாரம்பரியத்தில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்பாகவே நமது உணவு முறை இருந்தது. நமது உணவு எப்போதும் மருந்தாகவே இருந்துள்ளது. மருந்து எனத் தனியாக எதுவும் இல்லை. வாழுமிடத்துக்கு ஏற்பவும், காலநிலைக்கு ஏற்பவும் உணவு இருப்பதே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.
      இதை வலியுறுத்தவே இந்த ஆண்டை உணவு பாதுகாப்பு ஆண்டாக அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். தோட்டம் முதல் தட்டு வரை உணவைப் பாதுகாப்போம் (From farm to plate, make food safe) என்ற வாசகத்தை விழிப்புணர்வு வாசகமாக எடுத்துக் கொண்டுள்ளது. விளையும் நிலத்தில் இருந்து, நாம் பயன்படுத்தும் பாத்திரம் வரையில் என்னென்ன நடைபெறுகிறது என்பதை ஆராயவே இந்த வாசகம் வலியுறுத்துகிறது.
    வீரிய உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளித்து நஞ்சாக்கிய உணவைப் பெற்று, அதன் மூலம் பல்வேறு நோய்களையும் சகட்டுமேனிக்கு பெருக்கி வைத்திருக்கிறோம்.
         ஆகவே, இன்று நம்மீது திணிக்கப்பட்டுள்ள வேண்டாத உணவு வகைகளை உதறித் தள்ளியாக வேண்டும். ஒரே தானியமாக அரிசியை மூன்று வேளையும் சாப்பிடுவதை விட்டுவிட்டு அரிசி, கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு போன்றவற்றை சுழற்சி முறையில் உண்ண வேண்டும். வறுத்ததைவிட வேகவைத்த உணவை விரும்பிச் சாப்பிட பழக வேண்டும்.
                 நமது பாரம்பரிய உணவு முறையை மீட்டு அதைக் கடைபிடிப்பதுதான் இழந்து கொண்டிருக்கின்ற நமது ஆரோக்கியத்தை மீட்பதற்கான வழிமுறையாகும்.

                                                                  நன்றி: திட்டம், ஏப்ரல் 2015, குமுதம் சிநேகிதி, ஏப்ரல் 2015

திங்கள் இயற்கை விளைபொருள் அங்காடி திறப்பு விழா