Tuesday 12 May 2015

உணவே மருந்து மருந்தே உணவு

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
                                                                          -திருவள்ளுவர்

உணவே மருந்து மருந்தே உணவு

               தமிழ் பாரம்பரியத்தில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்பாகவே நமது உணவு முறை இருந்தது. நமது உணவு எப்போதும் மருந்தாகவே இருந்துள்ளது. மருந்து எனத் தனியாக எதுவும் இல்லை. வாழுமிடத்துக்கு ஏற்பவும், காலநிலைக்கு ஏற்பவும் உணவு இருப்பதே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.
      இதை வலியுறுத்தவே இந்த ஆண்டை உணவு பாதுகாப்பு ஆண்டாக அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். தோட்டம் முதல் தட்டு வரை உணவைப் பாதுகாப்போம் (From farm to plate, make food safe) என்ற வாசகத்தை விழிப்புணர்வு வாசகமாக எடுத்துக் கொண்டுள்ளது. விளையும் நிலத்தில் இருந்து, நாம் பயன்படுத்தும் பாத்திரம் வரையில் என்னென்ன நடைபெறுகிறது என்பதை ஆராயவே இந்த வாசகம் வலியுறுத்துகிறது.
    வீரிய உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளித்து நஞ்சாக்கிய உணவைப் பெற்று, அதன் மூலம் பல்வேறு நோய்களையும் சகட்டுமேனிக்கு பெருக்கி வைத்திருக்கிறோம்.
         ஆகவே, இன்று நம்மீது திணிக்கப்பட்டுள்ள வேண்டாத உணவு வகைகளை உதறித் தள்ளியாக வேண்டும். ஒரே தானியமாக அரிசியை மூன்று வேளையும் சாப்பிடுவதை விட்டுவிட்டு அரிசி, கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு போன்றவற்றை சுழற்சி முறையில் உண்ண வேண்டும். வறுத்ததைவிட வேகவைத்த உணவை விரும்பிச் சாப்பிட பழக வேண்டும்.
                 நமது பாரம்பரிய உணவு முறையை மீட்டு அதைக் கடைபிடிப்பதுதான் இழந்து கொண்டிருக்கின்ற நமது ஆரோக்கியத்தை மீட்பதற்கான வழிமுறையாகும்.

                                                                  நன்றி: திட்டம், ஏப்ரல் 2015, குமுதம் சிநேகிதி, ஏப்ரல் 2015

No comments:

Post a Comment